பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் ஆடவருக்கான வில் வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது .
இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
செப்.8 வரை நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர் .
Also Read : வேலூரில் மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கைது..!!
இந்நிலையில் அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான வில் வித்தை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாராலிம்பிக்கில் ஆடவர் வில் வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் ஹர்விந்தர் சிங் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பாராலிம்பிக்கில் 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் இந்தியா தற்போது 15 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.