பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஹொகாடோ சீமா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செப்.8 வரை நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர் .
இந்நிலையில் அனல் பறக்க நடைபெறும் வரும் இந்த தொடரில் இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் 14.65 மீட்டர் தூரம் எறிந்து இந்திய வீரர் ஹொகாடோ சீமா வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தாய் நாட்டிற்காக பதக்கம் வென்ற இந்திய வீரர் ஹொகாடோ சீமாவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான பாராலிம்பிக் தொடரில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்தியா 17ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.