பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் 3ஆவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது .
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
செப்.8 வரை நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர் .
உலக புகழ் பெற்ற இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்கின்றனர் இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதுமட்டுமின்றி பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் மாரியப்பன் பெற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ரியோவில் தங்கமும், 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் வெள்ளியும் மாரியப்பன் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது .