ITamilTv

ஒகேனக்கல்லில் 7-வது நாளாக பரிசல் இயக்க தடை..! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

Spread the love

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 7-வது நாளாக இன்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது .

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், ஆற்றில் இறங்கவோ, அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீரின் அளவு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லின் தனித்துவமாக பார்க்கப்படும் பரிசல் சவ்வாரிக்கு 7-வது நாளாக தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


Spread the love
Exit mobile version