ITamilTv

ஒகேனக்கலில் 5-வது நாளாக பரிசல் இயக்க தடை..! ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!

Spread the love

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 5-வது நாளாக இன்றும் ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 9,136 கன அடியிலிருந்து 13, 473 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 11,000 கன அடியாகவும் அதனைத் தொடா்ந்து மாலை நிலவரப்படி விநாடிக்கு 13,500 கன அடியாகவும் அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை காலை மேலும் அதிகரித்து 14 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று, (19.08.23) மீண்டும் நீர்வரத்து அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,776 கனஅடியும், கபினியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி என மொத்தம் 17,776 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Spread the love
Exit mobile version