Site icon ITamilTv

”பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்கள்..” தமிழகத்தை குறிவைக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்

தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

Spread the love

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.பிரசாரம் முடிய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிதலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக வாக்குசேகரிப்பதற்கு இன்று நெல்லையில் பிரதமர்மோடி, சென்னையில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின்மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிதலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
நாடாளுமன்றதேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர்மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: ”இணையத்தில் வைரலான வீடியோ” டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் பிரதமர்மோடி, நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர்பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதித.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தென்காசி (தனி) தொகுதி கூட்டணி வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தலைநகர் சென்னையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்செந்தில், வடசென்னைதி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதிவீராசாமி ஆகியோருக்குஆதரவுதிரட்டுகிறார். மேலும்முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின், நாளைகாஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார் என தகல்வல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பாஜக சொல்வது அப்பட்டமான பொய்க்கணக்கு – பதிலுக்கு பதில் பதிலடி கொடுக்கும் மு.க. ஸ்டாலின்..!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடிபழனிசாமி, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேவேட்பாளர் பார்த்தசாரதி, தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் ஆகியோருக்காக வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.

புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிகை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில், புதுச்சேரிக்கு வரும் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சென்று வரவேற்கிறார்.

வரும் 17-ந்தேதிமாலை 5 மணியுடன் தமிழகம் மற்றும் புதுசேரியில் பிரசாரம் ஓய்வடையும் நிலையில் தேர்தல் நாளான 19-ந்தே திகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது.


Spread the love
Exit mobile version