ITamilTv

பல பேரோட கனவா இருக்குற நிம்மதியான தூக்கம்! மெலடோனின் ஹார்மோனோட பங்கு!!

Peaceful sleep

Spread the love

Peaceful sleep தூக்கம்!

தூங்குன கனவு வரும்னு சொல்லுவாங்க.

ஆனா இப்போ நல்ல நிம்மதியான தூக்கம்ன்றது இங்க இருக்குற நெறைய பேரோட கனவாவே இருக்கு.

நிம்மதியான தூக்கம் … யாருக்குதான் பிடிக்காது.

அதுலயும் சரியான நேரத்தில் சரியான அளவு தூக்கம் என்பது ரெம்ப முக்கியம்.

ஏன்னா அது நம்முடைய உடல், மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது, சரும ஆரோக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பை கொடுக்குது.

நம்ம உடல்ல ஒவ்வொரு விதமான செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு வித ஹார்மோன்கள் காரணம்.

இதையும் படிங்க : தமிழிசை மீட்டிங்கில் ஆபாச படம்! இணையத்தில் பரப்பிய விஷமிகள்.. தேர்தல் பரப்புரையில் திடுக்!!

அதுல தூக்கத்திற்கு உதவி பண்ற முக்கியமான ஒரு ஹார்மோன் தான் மெலடோனின்.

நம்ம உடம்புல இருக்குற பல ஹார்மோன்களை உடல் தானாக சுரந்து கொள்ளும்.

அதுல சில ஹார்மோன்கள் நம்முடைய உணவு, பழக்க வழக்கம், வாழ்க்கை முறைபல அதிகமாகலாம் இல்லை குறையலாம்.

நம்ம உடம்புல இருக்குற மெலடோனின் ஹார்மோன் தான் காலையில் விழிப்பையும் இரவு நேரத்தில் தூக்கத்தையும் உண்டாக்குகிறது.

இந்த மெலடோனின் குறைபாடு ஒருத்தருக்கு வந்த, தூக்கமின்மை, இன்சோம்னியா, பகலில் அதிக சோர்வு போன்ற பிரச்சினைகள் வரும்.

இந்த பிரச்னைகளிருந்து வெளியேற மெலடோனின் உற்பத்தியைத் தூண்டுற மாதிரியான உணவுகளை எடுத்து கொள்வது முக்கியம்.

Peaceful sleep

எந்த மாதிரியான உணவு மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் Peaceful sleep?

முட்டை, கொழுப்பு நிறைந்த மீன்கள், வெதுவெதுப்பான பால், செர்ரி வகை பழங்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், நட்ஸ், மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளில் தூக்க சுழற்சியை மேம்படுத்தும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன.

மெலடோனின் குறைபாடு தூக்கமின்மை மட்டும் இல்லாம பெண்களில் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.

மேலும் வயதானவர்களுக்கு நரம்பியல் சம்பந்தமான நோய்களின் (அல்சைமர் மற்றும் நடுக்கம்) விளைவுகளை அதிகரிக்கக் கூடும்.

இதில் இன்சோம்னியா பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு, மெலடோனின் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் தினசரி உணவின் மூலமே பெறலாம்.

மெலடோனின் சப்ளிமெண்ட்டுகளை கர்ப்பம் தரிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் எடுத்துக் கூடாது.

இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 32ஆவது முறையாக நீட்டித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்


Spread the love
Exit mobile version