Site icon ITamilTv

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதா..? காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதி மன்றம்..!!

chennai hc

chennai hc

Spread the love

சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ( chennai hc ) காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று (மே 13) விசாரணைக்கு வந்தது.

Also Read : ஜெயக்குமார் மர்ம மரணம் – 10 டிஎஸ்பிகள் கொண்டு தனிப்படைகள் அமைப்பு..!!

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது :

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது.

சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க ( chennai hc ) வேண்டும் என காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.


Spread the love
Exit mobile version