Site icon itamiltv.com

 விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும்.. வெளுத்து வாங்கிய பியூஷ் கோயல்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் குறித்து கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறினார்.இந்நிலையில், மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களின் போட்டியிடும் தொகுதி குறித்து கட்சியினரும் பொதுமக்களும் கவனித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசியல் மற்றும் மக்களின் மனநிலையை முழுமையாக புரிந்து கொள்ள விஜய்க்கு இன்னும் அனுபவம் தேவைப்படுகின்றது என கருத்து தெரிவித்தார்.

முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் நீண்ட கால மக்கள் சேவையின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்தனர் என்றும் கூறினார்.

விஜய் தற்போது ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், அது நேரடியாக வாக்குகளாக மாறுவது சாத்தியமில்லை என்றும், அவர் குறைந்த அளவிலான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Exit mobile version