தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பெரம்பூர் தொகுதியுடன் சேர்த்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியை தேர்வு செய்ததற்கான பல காரணங்கள் உள்ளதாக கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
திருச்சி மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமாக இருப்பதால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் அதிகமாக உள்ளன.
இதனால், இந்த தொகுதியில் போட்டியிடுவது மூலம் மத்திய மற்றும் தென் மாவட்ட மக்களுடன் நெருக்கம் உருவாகும் என விஜய் கருதுகிறார்.
மேலும், நகர்ப்புறங்களில் கட்சிக்கு அதிக ஆதரவு இருப்பதும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அம்சங்கள் இரண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் இருப்பதால், அதைத் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
அதோடு, இந்த பகுதியில் சிறுபான்மை வாக்குகள் கணிசமாக இருப்பதும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு பிரச்சாரம் செய்ய குறைந்த நேரமே போதுமானதாக இருக்கும் என்பதால், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு வசதியாக இருக்கும் என்றும் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

