ITamilTv

ரம்மியால் தொடரும் மரணங்கள் – அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தல்

please fastup the ban law anbumani request

Spread the love

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த விளம்பரங்கள் சமூகவலைதளங்கள், எஸ்.எம்.எஸ்., தொலைக்காட்சி விளம்பரங்கள் என எங்கு பார்த்தாலும் காண முடிகிறது. இந்த விளம்பரங்களைப் பார்த்து, சிலர், பணம் மீதான ஆசை காரணமாகவோ, தேவை காரணமாக இதற்குள் மாட்டிக்கொள்ளும் பலர் கடனாளியாகி மன அழுத்தத்திற்கு உள்ளாகி கடைசியில் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிர்ந்துள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது.

அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது.

please-fastup-the-ban-law-anbumani-request
please fastup the ban law anbumani request

ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம், இந்த விஷயத்தில் பாமக-வின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version