கடந்த ஏப்ரல் 22, 24 தேதிகளில் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றார். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட முந்தைய பயணங்களுக்குப் பிறகு, இது சவுதி அரேபியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட மூன்றாவது பயணமாகும்.
சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபட்டது.

ஜம்மு காஷ்மீரின் பைசரன் சுற்றுலா தளத்தில் ராணுவ சீருடையில் வந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சவூதி பயணத்தை பாதியிலேயே முடித்து பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
இந்த பயணத்தின் போது, 2 நாட்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மோடி தங்கியிருந்தார். 2 நாட்களுக்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலின் வாடகை ரூ 10 கோடியே 26 லட்சம் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், பயண ஏற்பாடுகளுக்காக ரூ 4 கோடியே 5 லட்சம் செலவானதாகவும் தெரியவந்துள்ளது. இரண்டு நாள் பயத்திற்கு ரூ 14 கோடி 31 லட்சம் செலவழித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.