ITamilTv

கைகோர்த்த இந்தியா-நேபாளம் பிரதமர்கள்..உருவான புதிய சேவை!!

Spread the love

இந்தியா- நேபாளம் இடையிலான புதிய சரக்கு ரயில் சேவையை பிரதமர் மோடியும், பிரசந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேபாளப் பிரதமர் பிரசந்தா 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நேபாளப் பிரதமர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை (PM Narendra Modi) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த சந்திப்பின் போது இந்தியா – நேபாளம் இடையிலான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் இணைப்பு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும் பீகார் மாநிலம் பத்னாஹாவில் இருந்து நேபாளத்திற்கான சரக்கு ரயில் சேவையை இருநாட்டு பிரதமர்களும் ஒன்றாக தொடங்கி வைத்தனர்.பின்னர் இந்த சந்திப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி(PM Narendra Modi),

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளம் சென்ற போது, இருநாட்டு இடையிலான உறவை வலுப்படுத்த எல்லை தடையாக இருக்காது என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.

அந்த வகையில் தற்போது இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக கூறினார்.மேலும் இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம், எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நேப்பாள பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.


Spread the love
Exit mobile version