Site icon ITamilTv

Deep Sea பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி..!!

Deep Sea

Deep Sea

Spread the love

குஜராத்தில் துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் (Deep Sea) ஆழ்கடலில் பிரதமர் மோடி பிராத்தனை செய்துள்ள காணொளி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

குஜராத்தில் ஓகா நிலப்பரப்பையும், துவாரகா தீவையும் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகிலுள்ள தீவான பேய்ட் துவாரகாவில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கிருஷ்ணர் கோயிலிலும் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

இதையடுத்து துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் ஆழ்கடலில் பிரதமர் மோடி பிராத்தனை செய்துள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகத்திலிருந்து புறப்பட்டபோது (Deep Sea) அவர் ஆட்சி புரிந்த துவாரகா மாநகரம் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்படதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது .

கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி. கடலுக்கடியில் மயிலிறகை காணிக்கையாக செலுத்தி வழிபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியதாவது :

நீருக்கடியில் மூழ்கிருக்கும் துவாரகா நகரத்திற்கு சென்று பார்விட்டத்தில் மகிழ்ச்சி இது எனக்கு மிகவும் தெய்வீக அனுபவமாக உணரவைக்கிறது.

பண்டைய காலத்துடன் நான் தொடர்பில் இருந்தது போல் உணர்கிறேன் இந்த நாள் எனக்கு உணர்ச்சிகரநாளாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வரும் 28-ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார் .

Also Read : https://itamiltv.com/thoothukudi-and-nellai-districts-new-notifications-from-tncm/

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாக்களின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏரளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் .

பிரதமர் உள்பட ஏரளமான தலைவர்கள் வருகை தர உள்ளதால் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.


Spread the love
Exit mobile version