Site icon ITamilTv

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது – போக்குவரத்து துறை

tnstc

tnstc

Spread the love

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமலே பயணம் செய்த காவலரின் வீடியோ இணையத்தில் ( tnstc ) வைரலானதை அடுத்து காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது .

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி பேருந்து நடத்துனரிடம் தீவிர வாங்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .

Also Read : உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு – முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து..!!

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.

“காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

நாங்குநேரியில் டிக்கெட் இன்றி பயணிக்க பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் ( tnstc ) மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Spread the love
Exit mobile version