Site icon ITamilTv

அடுத்தடுத்து குவியும் வழக்குகள் : சவுக்கு சங்கர் மீது போலீசார் பணமோசடி வழக்குப்பதிவு..!!

savuku Shankar

savuku Shankar

Spread the love

சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கர் நடத்தும் யூ-டியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணி கடை நடத்தும் கிருஷ்ணன் என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிருஷ்ணனிடம் விக்னேஷ் ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிகிறது.இதையடுத்து , கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்டையில், விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Also Read : ரஷ்யா அதிபர் புடின் இந்திய பிரதமர் மோடி சந்திப்பின்போது நடந்து என்ன..? சுவாரஸ்ய தகவல் இதோ..!!

இதையடுத்து விக்னேஷை கைது செய்த கரூர் நகர போலீசார். அவரை சிறையில் அடைத்தனர். இந்த, நிலையில், விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புழல் சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருந்து வரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று கரூர் குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்னிலையில் போலீசார் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்குமாறு அனுமதி கேட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பரத்குமார், 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Spread the love
Exit mobile version