ITamilTv

“ஜஸ்ட் ஒரு காபிக்காகத்தான்..!” வாண்டையார் – அண்ணாமலை சந்திப்பு

அண்ணாமலை

Spread the love

வாண்டையாரின் குடும்பம் என்றாலே, பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் என்பது தஞ்சை மாவட்டத்தில் அனைவரும் அறிந்த ஒன்று. துளசி ஐயா வாண்டையாரை பொறுத்தவரை, தீவிரமான காங்கிரஸ்காரர். காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்தவர்.

அவரது மகன்தான் கிருஷ்ணசாமி வாண்டையார், தந்தையின் வழியில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர் இவர் இப்போது தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிர்ஸ் தலைவராக இருக்கிறார். அப்படிப்பட்ட தஞ்சை மாவட்ட காங்கிரஸ் ஜாம்பவானைத்தான் பாஜகவில் இணைக்க கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பகீர பிரயத்தனம் செய்து வருகிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.அப்படித்தான் கடந்த வாரமும் ஒரு முயற்சியை செய்திருக்கிறார் அண்ணாமலை.

கடந்த வாரம் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து திருவையாறில் பிரசாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அதற்காக தஞ்சை வந்திருந்த அண்ணாமலை, அங்கிருந்து திருவையாறு செல்லும்போது தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டுக்கு திடீர் விசிட் அடிக்கவே கொஞ்சம் ஆடித்தான் போயினர் காங்கிரஸ் கட்சியினர். காரணம், எப்போதுமே மூடியே இருக்கும் வாண்டியார் வீட்டு நிழைவாயில் அண்னாமலைக்காக திறந்தே இருந்தது பாஜகவினரையே கொஞ்சம் ஆச்சரியப் படுத்திதான் இருந்தது.

அண்ணாமலை

அண்ணாமலை வருவதற்கு முன்பே வாண்டையார் வீட்டுக்கு வந்திருந்த தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம், ஜெய் சதிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வீட்டுக்குள் சென்று கிருஷ்ணசாமி வாண்டையாருடன் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு, பிளியில் வந்த கிருஷ்ணசாமி வாண்டையார், மரியாதை நிமித்தமான சந்திப்பிற்காக அண்ணாமலை வருகிறார். இப்பதான் எனக்கு தகவல் சொன்னார்கள், இதில் நீங்கள் மெல்வதற்கு ஒன்றும் இல்லை’ என சிரித்தபடியே கூற, அரை மணி நேரம் கழித்து பிரசார வேனில் வந்திறங்கினார் அண்ணாமலை.

அவரை வாசல் வரை வந்து வரவேற்ற கிருஷ்ணசாமி வாண்டையார் அண்ணாமலைக்கு சால்வை போட்டு வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு பாரம்பரிய நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, அண்ணாமலையை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி வாண்டையார், அறைக்கதவை சாத்திக்கொண்டு கால் மணி நேரத்திற்கு மேலாக அவருடன் ரகசிய ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை. சென்னையில் அவரை சந்தித்தபோது, தஞ்சாவூர் வரும்போது, வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என்றேன். அதற்காகவே இப்போது வந்தேன் இதை அரசியல் பெட்டிக்குள் அடைக்காதீர்கள்” எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி – பல்லடத்தில் பகீர் கிளப்பிய அண்ணாமலை

தற்போது தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலிக்காக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் கிருஷ்ணசாமி வாண்டையார். இ ந் நிலையில், இருவரது இந்த சந்திப்பு தஞ்சை தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

இது குறித்து தஞ்சை மாவட்ட முக்கிய உடன்பிறப்புகள் சிலர் நம்மிடம் பேசும் போது, “தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல் செய்தபோது உடன் சென்றதுடன், அவருக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் கிருஷ்ணசாமி வாண்டையார். இந்நிலையில் அண்ணாமலை அவரை வீட்டில் வந்து சந்தித்திருப்பது பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அ.ம.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருவதால், தினகரனின் சம்பந்தி என்ற முறையில் கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் அண்ணாமலை ஆதரவு திரட்டியிருக்கலாம் என்பதாகவே நம்ப வேண்டி இருக்கிறது. தற்போதைய சூழலில் இதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை” என அவர்கள் கூறிய நிலையில், காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் சிலர் இது குறித்து பேசும் போது, “பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த வாண்டையாருக்கு காங்கிரஸ் மேலிடம் உரிய மரியாதை தருவதில்லை என்ற வருத்டம் நிறையவே இருக்கீறது. ஆரம்பத்தில், கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே, பொன்.ராதாகிருஷ்ணனிடம் இருந்து பாஜகவில் சேர அழைப்பு வந்த்தாகவும், அதை நிராகரித்து விட்டதாகவும் கூறி இருந்தார் வாண்டையார்.

தற்போது, அவரது வீட்டுக்கு அண்ணாமையே தங்கள் தொண்டர்கள் புடைசூழ வந்து தனியாக சந்தித்து பேசி விட்டு போயிருகிறார். இனிமேலும், காங்கிரஸ் கட்சி வாண்டையார் மீது பாராமுகம் காட்டுமானால் எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என சத்தமில்லாமல் சைரன் அடித்தனர் அவர்கள்.

அதே நேரத்தில், தினகரனின் மகளை திருமணம் செய்துள்ள வாண்டையாரின் மகனும் தனது மருமகனும், காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ராமநாதனை விரைவில் அம்முகவிற்குள் அழைத்து வந்து அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாகவும், அந்த நேரம் பார்த்து தனது சம்பந்தியான தாங்கள் பாஜகவின் இருந்தால், அது நன்றாக இருக்காது “ என கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் டிடிவி தினகரன் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Spread the love
Exit mobile version