Site icon ITamilTv

”PRESS, Police,stickers ஒட்ட தடை..”ஆனா ஸ்டிக்கர் கிழிக்க.. – காவல்துறை விளக்கம்!

press police stickers vehicles tn Police

press police stickers vehicles tn Police

Spread the love

PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ( stickers ) ஒட்ட காவல்துறை தடை விதிக்கபட்ட நிலையில், வாகன அடையாள ஸ்டிக்கர் கிழிக்க உத்தரவிடவில்லை என்று காவல்துறை உயர்அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் இரு சக்கரம் மற்றும் வாகனங்களில் ஒட்டப்படும் அடையாள ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என செய்தி ஒன்று வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சில இடங்களில் போலீசார் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு அடையாள இலச்சினைகளையும் கிழித்தெறிந்தனர்.

இதனால் செய்தியாளர்கள் மற்றும் பிற அரசு துறை சார்ந்தவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக நான் காவல் போக்குவரத்து உயர்அதிகாரி திரு. சுதாகர் அவர்களிடம் நமது சங்கத்தின் சார்பில் விளக்கம் கேட்டபோது,அவர் அப்படி அடையாள ஸ்டிக்கர் மற்றும் இலச்சினைகளை கிழித்து எறிய காவலர்களுக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.

இதையும் படிங்க: PRESS, Police, உள்ளிட்ட ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்ட தடை – காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!!

மேலும் வாகனங்களில் உள்ள பதிவெண் இடம்பெற்றுள்ள பகுதியில் எந்த ஒரு உருவமும் எழுத்தும் இருக்க கூடாது எனதான் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் குற்றங்களை தடுக்கவும். குற்றவாளிகளை அடையாளம் காணும் விதமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ஸ்டிக்கர். மற்றும் இலச்சினைகளை கிழிக்கவோ அகற்றவோ உத்தரவிடப்படவில்லை. என்றார். இதனால் செய்தியாளர்கள் குழப்பமின்றி தங்களின் பணி தொடரலாம்.

வாகனங்களின் பதிவு எண்கள் உள்ள இடத்தில் ஸ்டிக்கர்கள் இருந்தால் அவற்றை அகற்றி காவலர்களின் கண்காணிப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என சென்னை மாநகர வாகன ஓட்டிகள் அனைவரையும்கேட்டுக்கொண்டுள்ளார்


Spread the love
Exit mobile version