பி.பி.டி.சி. நிறுவனம் மாஞ்சோலை (manjolai) தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது..
“பி.பி.டி.சி. நிறுவனம் தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு குறித்து கடந்த 30-ந்தேதி அறிவித்தது. விருப்ப ஓய்வு திட்டத்தின்படி, தொழிலாளர்கள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பத்தை நிறுவனம் வழங்கி கொண்டிருக்கிறது.
விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் தீர்வு ஒப்பந்தத்தின்படி, இறுதி நாள் 15.6.2024 என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இறுதிநாள் என்பது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த தொழிலாளர்கள் (தீர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி) தங்களது பணியில் இருந்து ஓய்வுபெறுகின்ற நாளையும், மற்றும் அன்றைய நாளில் பி.பி.டி.சி. நிர்வாகத்தின் தொழிலாளர்கள் என்பதில் இருந்து விடுவிக்கப்படுவது ஆகும்.
சட்டப்படியிலான அனைத்து தொகைகளும் (தற்போதைய தொகைகள்) தீர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி விருப்ப ஓய்வு விண்ணப்பம் செய்தவர்களின் கணக்கில் பி.பி.டி.சி. நிறுவன விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்ட கடிதம் வழங்கிய பின்பு 25 சதவீதம் கருணைத்தொகையுடன் வரவு வைக்கப்படும்.
இதையும் படிங்க : June 13 Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!
25 சதவீத கருணைத்தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தீர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னரே வழங்கப்படும்.
விருப்ப ஓய்வு விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் வசம் உள்ள நிர்வாகத்தின் அனைத்து உடைமைகளையும் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தங்களது குடியிருப்புக்காக வழங்கப்பட்ட (manjolai) தொழிலாளர் வீடுகளை காலி செய்து இறுதி நாளின் 45 நாட்களுக்குள் அல்லது வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந்தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு தங்களது வீடுகளை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 75 சதவீத கருணைத் தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்படி முழு மற்றும் இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பம் பெறப்படும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.