ITamilTv

நாடு முழுவதும் `அக்னி’யாக எரியும் அக்னிபாத் திட்டம்.. – பாஜக நிர்வாகிகள் வீடுகள் மீது தாக்குதல்!

Spread the love

அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பீகாரில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடந்துள்ளது.

இந்திய ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டுக் காலத்திற்கு மட்டுமே பணியாற்ற மத்திய அரசு புதிய அக்னிபாத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும் என்றும் 4 ஆண்டுகள் முடிவடைந்த பின்பு சேவா நிதி என்ற ஒரே தடவை தொகுப்பு திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பல இடங்களில் ரயில்களை மறித்தனர் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பீகார், மொகியுதிநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.அதனைத் தொடர்ந்து தும்ரான் ரயில் நிலையத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அக்னிபாத் திட்டத்தின் மூலம் தற்பொழுது உத்திரபிரதேசம் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் ரயில்களைச் சேதப்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பீகாரில் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், பாஜக நிர்வாகிகள் ரேணுதேவி, சஞ்சய் ஜெய்ஷ்வாலின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்று வருவதால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Spread the love
Exit mobile version