Site icon ITamilTv

நேரக் கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது. – கறார் காட்டும் காவல்துறை

tn police

tn police

Spread the love

சமூக ஆர்வலர் ஜலீல் மனுவின் படி இரவு நேரங்களில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் ( tn police ) பொதுமக்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் கொடுத்துள்ளது.

கோடை வெயிலால் வெப்பத்தை தணிக்க மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நினையில் இரவு நேரங்களில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது.

Also Read : பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர் – திருமாவளவன்

சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன் படி பொது இடங்களில் கூடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் அளித்துள்ளது.

கோடை காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய ( tn police ) நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Spread the love
Exit mobile version