புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், பாஜகவுக்கு 10 தொகுதிகள், அதிமுக மற்றும் லஜக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி என்.டி.ஏ தொகுதி பங்கீடு
கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, அதிமுகக்கு இந்த முறை குறைந்த தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய தேர்தலில் போலவே இந்த முறைவும் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
புதிய கட்சியான லஜகவுக்கும் 2 தொகுதி
அதே சமயம், பாஜகவுக்கு கடந்த முறை இருந்ததை விட ஒரு தொகுதி அதிகரித்து 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, இம்முறை 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளது. புதிய கட்சியான லஜகவுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், சில தொகுதிகளில் கட்சிகள் இடமாற்றம் செய்துள்ளன. குறிப்பாக, மாஹே மற்றும் ராஜ்பவன் தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன. ராஜ்பவன் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் போட்டியிட உள்ளார்.
இந்த முறை வாய்ப்பு குறைவு
அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் சில பழைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லஜக கட்சியிலிருந்து ஜோஸ் சார்லஸ் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

