ITamilTv

10.5% Reservation:தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!

reservation

Spread the love

reservation: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு வரும் 11 ஆம் நாளுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது.

இந்தக் காலத்தில், தமிழக அரசு நினைத்திருந்தால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து அறிக்கை பெற்று, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், ஆணையத்திடம் இருந்து பரிந்துரை அறிக்கையைக் கூட அரசு பெறவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டின் பயனாளிகள் விவரங்களைப் பெற்று,

அவர்களில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பதை கணக்கிடுவது தான் ஆணையத்தின் பணி. எனினும்,

அதற்கான மனிதவளம் தங்களிடம் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து,அந்தப் பணிகளை அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையே நேரடியாக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.

அதற்குப் பிறகும் 9 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால்,

வன்னியர் இட ஒதுக்கீடு (reservation) சிக்கலில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. அலட்சியம் காட்டுகிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

Also Read : https://x.com/ITamilTVNews/status/1744266261641699488?s=20

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 3 முறை முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளார்.

பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்கள்.

நிறைவாக கடந்த டிசம்பர் 29 ஆம் நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நானே நேரில் சந்தித்து வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் பற்றி வலியுறுத்தினேன்.

அப்போதும் ஜனவரியில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

முதல்வர் உறுதியளித்ததைத் தவிர வன்னியர் இட ஒதுக்கீட்டு சிக்கலில் வேறேதுவும் நடக்கவில்லை.அதுவும் குறிப்பாக வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில்,

Also Read :https://itamiltv.com/minister-murthy-said-trncm-inaugurate-the-jallikattu-stadium/

அதை நிறைவேற்றித் தர வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்றிக் கொடுக்கும் என்று நம்புகிறோம்;

இல்லாவிட்டால் போராடி சமூகநீதியை வென்றெடுக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிக்காக போராட்டங்களை நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சங்கத்திற்கும் புதிதல்ல.

வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தொடங்கி, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர் சமூகத்திற்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வரை அனைத்து இட ஒதுக்கீடுகளையும் போராடித் தான் வென்றிருக்கிறோம் என்பது வரலாறு.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அலட்சியமும், தாமதமும் செய்யப்படும் போக்கை மாற்றி,

அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இம்மாத இறுதியில் கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் இட ஒதுக்கீடு (reservation) சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version