தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே மோதலானது உச்சகட்டத்தை தொட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருவதால் பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பாமக தங்களுக்கு தான் சொந்தம் கொண்டாடி இருதரப்பினரும் மோதி வருகின்றனர். இதனால் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில், மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி பாமகவினரை மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ச. இராமதாஸ் சரஸ்வதி அம்மையாரை 1965 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் 24, 2025 அன்று 60வது திருமண நாளை தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடினர். இந்த நிகழ்வின் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் பரவிய நிலையில், இவரின் இரண்டாவது திருமணம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த வாரம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சுசிலா என்ற பெண்ணோடு தனது 50வது திருமண நாளை கொண்டாடியுள்ளார் ராமதாஸ். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திண்டிவனம் நகரத்திற்குள் ராமதாஸ் சிறிய கிளினிக் வைத்திருந்தபோது இவர் சுசீலா நர்சாக 50 வருடங்களுக்கு முன்பே வந்து சேர்ந்தார். அப்போது முதல் ராமதாஸ் அந்த பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வன்னியர் சங்க தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவரான சிஎன் ராமமூர்த்தி ஒரு யூடூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ஏ.கே மூர்த்தி தான், சுசீலாவை கூட்டி வந்து ராமதாஸ்க்கு திருமணம் செய்து வைத்தார் எனவும் தளி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்ததே அவர் தான் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது ஏகே மூர்த்தி அன்புமணியோடு சுற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமதாஸ்- சுசீலா திருமணத்திற்கு ஏகே. மூர்த்தி தான் சாட்சி எனவும் ராமமூர்த்தி அடித்து கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு தான் இது ஆச்சரியமாக இருக்கும் ஆனால், ராமதாஸ் நெருங்கிய உறவுகளுக்கு இது முன்பே தெரியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
