Site icon ITamilTv

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பரபரப்பு..!

Spread the love

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அப்போது ரிசர்வ் வங்கி மண்டலா இயக்குனர் தேசிய கொடியை ஏற்றினார். விழாவின் நிறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அங்கிருந்த அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்க அவசியமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்தது தொடர்பாக உரிய புகார் அளிக்கும் பட்சத்தில் அரசு ஆணைப்படி விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version