மீதமான சாதத்தை மறுநாள் சூடாக்கிச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கின்றது. முந்தைய நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் தயிர் கலந்து சாப்பிடும் பழைய சோற்றின் ருசியே தனிதான்.
இதனால், பல நன்மைகள் உள்ளன. ஆனால், அதே மீந்துபோன சாதத்தை மறுநாள் சூடாக்கிச் சுடச்சுடச் சாப்பிட்டால் அது விஷமாகும் என ஆய்வுகள் கூறுகிறது.
சுகாதார அமைப்புப் படி சமைக்காத அரிசியில் “பேசிலஸ் செரியஸ்” (bacillus cereus) என்னும் பாக்டீரியா இருக்கிறது. அது ஃபுட் பாய்சனை உண்டாக்கக் கூடிய பாக்டீரியா. இந்த பாக்டீரியாவானது சமைத்த பின்பும் உயிர் வாழும் ஆற்றல் கொண்டது.
எனவே, அந்த உணவை அப்படியே அறையின் வெப்பநிலையில் வைத்திருந்தால் அவை வேகமாக வளரும் ஆற்றல் கொண்டவை.அந்த சாதத்தை மீண்டும் சூடாக்கிச் சாப்பிடுவது உடல் நலத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடியது.
மீதமான சாதம் மட்டுமல்லாமல் கீரை வகைகள், கேரட் மற்றும் முள்ளங்கி என நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சூடாக்கினால் அதுவும் விஷமாக மாறும்.
வேக வைத்த உணவை மீண்டும் சூடு படுத்தினால் “பேசிலஸ் செரியஸ்” (bacillus cereus) என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.
மேலும், முட்டை மற்றும் சிக்கன் போன்ற உணவுகளிலும் புரட்டின் சத்து அதிகமாக இருப்பதால் சூடுபடுத்தி உண்ணும்போது அது விஷமாக மாறும்.
அப்படியானால், சாதம் மிஞ்சினால் என்ன தான் செய்வது? குப்பையில் கொட்டவும் மனமில்லை என்றால் என்ன செய்யலாம்?
இவ்வாறு மீதமான சாதத்தை அப்போதே, உடனடியாக ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சூடாக்கிச் சாப்பிடலாம். ஆனால், அதுவும் ஒரு நாளைக்கு மேல் வைத்துச் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.