தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ( red alert ) கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கி வந்த நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.
இந்நிலையில் , கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியாகி அனைவருக்கும் இன்பச்செய்தியை கொடுத்தது . அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வீழ்ச்சிகள் மற்றும் அதனை ஒட்டிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்தும்
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்தும்
மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், ( red alert ) பெரம்பலூர், திருவாரூர் , நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .