ITamilTv

தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம்? – மதுரை விமான நிலையத்தில் மா.சுப்பிரமணியன் பேச்சு

Spread the love

தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பார்கள் என நம்புகிறோம் என மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

இந்நிலையில், துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் குரங்கம்மை பரிசோதனைகளையும், பரிசோதனைக்கான ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குரங்கம்மை பரவல் குறித்து அனைத்து பன்னாட்டு விமானை நிலையகளிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மதுரை கோவை உள்ளிட்ட பன்னாட்டு விமானை நிலையங்களில் தொடர்ச்சியாக பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிது. ளிநாட்டு பயணிகள் முகங்களிலோ முழங்கைக்கு கீழ் ஏதாவது கொப்பளங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


குரங்கம்மை பாதிப்பு 72 நாடுகளில் கூடுதல் பாதிப்பாக பரவி உள்ளது. உலகம் முழுவதும் 14,533 பேருக்கு பாதிப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லி, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலிக்கிறது தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் எடுத்துள்ளோம் அதை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.


Spread the love
Exit mobile version