Site icon ITamilTv

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

வரலாறு காணாத கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு மேற்கோடனார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளின் சிகிச்சை உபகரணங்கள் என சுகாதார கட்டம்மைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், வெள்ளம் சூழ தொடங்கிய உடனே மருத்துவமனைகளில் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.

சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் பொது மக்களும் விழிப்போடு இருக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் வரும் நடமாடும் மருத்துவ குழுவிடம் சென்று பொதுமக்கள் அனைவரும் உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version