Site icon ITamilTv

ரூ.4 கோடி விவகாரம் – நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்..!!

4 crore issue

4 crore issue

Spread the love

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக நயினார் ( 4 crore issue ) நாகேந்திரனுக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது .இதற்காக வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன் சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் சோதனை செய்ததில் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என கூறப்பட்டது.

Also Read : செயலிழந்துபோன சுகாதாரத்துறையை சீரமைப்பது எப்போது..? – TTV தினகரன்

இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகுமாறு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களிலும் சில சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்க பணம் சிக்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு மீண்டும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், கோவர்தன், உதவியாளர் ( 4 crore issue ) மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


Spread the love
Exit mobile version