வெங்காயம் – தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி – வெங்காயம் விற்பனை சற்று குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக வெங்காயம் – தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . எங்கு சென்றாலும் காய்கறிகளின் விலை மளமளவென உயர்ந்து காணப்படும் நிலையில் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தற்போது வெங்காயம் – தக்காளி கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறது.
இந்நிலையில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி – வெங்காயம் விற்பனை சற்று குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது வெங்காயம் – தக்காளி ஆகியவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடைகளில் வெங்காயம் கிலோ ₹55 வரை, தக்காளி ₹80 வரை விற்பனையாகும் நிலையில், இங்கு வெங்காயம் கிலோ ₹40க்கும், தக்காளி கிலோ ₹60க்கும் விற்பனை செய்யப்படுகிறது . ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.