ITamilTv

டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயர் துடைத்த மேட்டூர் அணை!!

Spread the love

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின்(mettur dam) நீர்மட்டம் 65.87 அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு(mettur dam) நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 489 கன அடியாக நீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஆயிரத்து 626 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, இன்று காலை 65.87 அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அணையில் தற்போது 29.25 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 250 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


Spread the love
Exit mobile version