Site icon itamiltv.com

பாஜகவில் எனக்கு பதவி வழங்கவில்லை என குற்றச்சாட்டு.. – சரத்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு!

பாஜகவில் தக்க அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்னை தி.நகரில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில், தேசிய மட்டத்தில் பதவி வழங்குவதாக கூறிய வாக்குறுதி நிறைவேறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். சிலர் அவர் கட்சியை விட்டு வெளியேறி, மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த சரத்குமார், அண்ணாமலை அளித்த வாக்குறுதி நிறைவேறாததை சுட்டிக்காட்டி, தன்னுடைய தகுதிக்கு ஏற்ற அங்கீகாரம் ஏன் கிடைக்கவில்லை என்று நேர்மையாக கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சிலர் பியூஷ் கோயலை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நீண்ட காலமாக தன்னுடன் இருந்த நிர்வாகிகள் தங்களது மனக்கசப்பை வெளிப்படுத்தியதாகவும், தேர்தல் நேரத்தில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும், கட்சியை விட்டு வெளியேறுவது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தற்போது எந்த தீர்மானமும் இல்லை என்றும், வரும் தேர்தலில் தானோ அல்லது அவரது மனைவியோ போட்டியிடமாட்டார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Exit mobile version