Site icon ITamilTv

Scam: *401#’-க்கு அழைக்காதிங்க! – அரசு எச்சரிக்கை

Scam

Scam

Spread the love

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி (Scam) அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல் தொடா்புத்துறை எச்சரித்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே சர்வ சாதாரணமாக ஸ்மார்போன்களை பயன்படுத்துவதால், இதுதொடர்பான ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி இருக்கின்றன.

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி பலரிடம் இருந்து பணத்தை மோசடிக் கும்பல் கொள்ளையடிக்கின்றனர்.

யூடுயூபில் லைக் செய்தால் பணம், கூரியர் டெலிவரி செய்தால் பணம், டேட்டா என்ட்ரி என பல ரூபங்களில் இந்த மோசடி வேலைகள் நடைபெறுகின்றன.

இப்படியான மோசடிகள் பெரும்பாலும் மொபைல் போன் மூலமாகத்தான் செய்யபடுகின்றன. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் சிக்காமல் இருக்க மத்திய மாநில அரசுகளும், காவல்துறையினரும் பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறன.

இந்த நிலையில் செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி (Scam) அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரித்தப்பட்டுள்ளது.

தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள்,

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.

இதையும் படியுங்க : https://itamiltv.com/senthil-balaji-senthil-balajisenthil-balajis-bail-plea-dismissed-for-the-3rd-time-judge-alli/

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘ *401#’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனா்.

இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை.

https://x.com/ITamilTVNews/status/1746090969618149537?s=20

அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version