ITamilTv

School, College Leave : தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

school and college leave tamilnadu rain including chennai

Spread the love

தமிழகத்தில் சென்னை, மதுரை, சிவகங்கை, செங்கல்பட்டு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.

அதன்படி மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school-and-college-leave-tamilnadu-rain-including-chennai
school and college leave tamilnadu rain including chennai

அதேபோல சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர் புதுக்கோட்டை தூத்துக்குடி நெல்லை தென்காசி விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version