ஓய்வு பெரும் முடிவை எடுக்க தோனி தான் காரணம் எனவும் அதை சச்சின் தடுத்து நிறுத்தியதாகவும் வீரேந்திர சேவாக் மனம் திறந்துள்ளார்.
இந்தியா கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி மன்னன், முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், இன்று ஒரு சுவாரஸ்யமான நினைவினை பகிர்ந்திருக்கிறார். கிரிக்கெட் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை பற்றி மனம் திறந்துள்ளார்.
2007–08 ஆஸ்திரேலிய ட்ரை-நேஷன் சீரிஸின் போது, அப்போது அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, மூன்று போட்டிகளுக்குப் பிறகு அவரை பிளேயிங் எலெவனில் இருந்து விலக்கியதாக சேவாக் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு, அவரை நேரடியாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு எடுக்க நினைக்க வைத்தது.
அந்த நேரத்தில் அவர் ஆலோசனைக்காக சென்றது, ஒரே ஒருவரிடம் தான். சச்சின் டெண்டுல்கர். அன்று சச்சின் கூறிய ஆலோசனை, சேவாகின் வாழ்க்கையை மாற்றிய வாக்கியமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“Emotional-ஆ இருக்கும்போது எந்த முடிவையும் எடுக்காதே. ஓய்வு எடுக்க வேண்டிய நாள் வந்தாலும், அது அமைதியான மனநிலையிலிருந்து வர வேண்டும். நேரம் கொடு, உன் ஆட்டத்தை இன்னும் ஒரு இரண்டு சீரிஸில் நிரூபி.”
சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள், ஒரு நாள் போட்டியில் இருந்து விலகும் சேவாகின் மனநிலையை மாற்றியிருக்கிறது. ஓய்வு முடிவை ஒத்தி வைத்து, அடுத்தடுத்த தொடர்களில் தான் யார் என்பாய் நிரூபித்தார். 2011 உலகக்கோப்பை வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த அனுபவத்தை பகிர்ந்த சேவாக், “அந்த நேரத்தில் சச்சின் சொல்லாதிருந்தால், நான் 2008-லேயே ஓய்வு எடுத்து இருப்பேன். அப்போ 2011 உலகக்கோப்பையை வெல்லும் கனவு கூட நிறைவேறியிருக்காது” என்று கூறினார்.
இந்த சம்பவம், ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான வார்த்தையின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதைச் சொல்கிறது. தோனியின் அணித் தீர்மானம் அப்போது கஷ்டமாயிருந்தாலும், அது சச்சின் வழிகாட்டுதலால் சேவாகின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக மாறியது.
