Site icon ITamilTv

மதுரைக்கு வரும் மோடி.. சுறுசுறுப்பான முதல்வர்.. – இருவரையும் புகழ்ந்த முன்னாள் அமைச்சர்..!

Spread the love

தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்பதை வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு செய்தது போல தி.மு.க. அரசும் செயல்பட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக சுறு சுறுப்பாக பணியாற்றுகிறார். அவரோடு சேர்ந்து அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்பதை வழங்க வேண்டும்.ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.ஆளும் கட்சி, எதிர்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அ.தி.மு.க. மக்களின் நலனுக்காக போராடும்.

வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாசாரத்தையும், பெருமையையும் பற்றி பேசி வருபவர் மோடி, உலகெங்கும் தமிழர்களின் கலாசார பெருமையை பறைசாற்றி வருகிறார். திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐ.நா சபை வரை எடுத்து சென்று பேசி வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.

தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு தற்போது வரவேற்பு அளிப்பதில் இருந்தே தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று மக்களுக்கு புரியும் என செல்லூர் ராஜு கூறினார்.


Spread the love
Exit mobile version