தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அந்த பதவியில் தொடரமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “85 சதவீத வேட்பாளர்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர் தேர்வில் எந்த சிக்கலும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், வேட்பாளர் அறிவிப்பில் கட்சித் தலைமையின் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளதாகவும், முக்கிய தலைவர்கள் இடையே ஆலோசனை நடந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு மாநில தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து ராகுல் காந்தியிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.
செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை முன்னிட்டு இப்படியான முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன
