ITamilTv

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : தொடரும் சர்ச்சை!

Spread the love

கிளாம்பாக்கம் (kilambakkam) பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லை – தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் குற்றம்சாட்டு..

மிகப்பெரிய பேருந்து நிலையமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அப்போது முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

மேலும், அவர் தொடக்கி வைத்த இந்த பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டிருந்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 160 பிளாட்பார்ம்கள் உள்ளன. இதன் பட்ஜெட் 103 கோடி ரூபாய். இதன் பரப்பளவு மொத்தம் 36.5 ஏக்கர். இந்த பேருந்து நிலையத்தில் லாக்கர் ரூம்கள், ஹோட்டல்கள், சிறிய உணவு கடைகள், ஏடிஎம்கள், 10 டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், தங்கும் இடங்கள் என பயணிகளுக்கு அனைத்தும் உள்ளன.

இத்தனை வசதிகள் இருந்தாலும் கூட பண்டிகை காலங்களின் போது அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது. அதிலும், தென் தமிழகம் செல்லும் பயணிகள் கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்தை ஊர்ந்து சென்று தங்கள் சொந்த ஊர்களுக்கு போவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதனை சமாளிக்க அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : https://itamiltv.com/kilambakkam-bus-station-opening-soon/

kilambakkam
kilambakkam

இது கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்து. ஆனால்,பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இத்தனை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்த வசதி இல்லை என SETC குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்ல 202 பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஆனால் கிளாம்பாக்கத்தில் 100 பேருந்துகளை நிறுத்துவதற்கான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இன்று கிளாம்பாக்கம் (kilambakkam) பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலைய கல்வெட்டு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் பேட்டரி காரில் அமர்ந்தபடி பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.


Spread the love
Exit mobile version