ITamilTv

தோழிகளுடன் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி பலி – 3 பேரின் உயிரை மீட்ட 13 வயது சிறுவன்

Spread the love

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 7ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த கடப்பமரத்துப் பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மகள் விஸ்வஜோதி(12). என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று தனது நண்பர்களான தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் மற்றும் அவரது சகோதரி மகரஜோதி, ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள முத்தாளம்மன் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அனைவரும் குளத்தில் இறங்கி உற்சாகமாக விளையாடியவாறு குளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் விஸ்வஜோதி, தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதனால் நீரில் மூழ்கிய மூவரும், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.

இதனை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல்ராஜ் என்பவரது 13 வயது மகன் சபரீஸ்வரன் குளத்துக்குள் இறங்கி தேவதர்ஷினி, மகரஜோதி, ரவி பிரகாஷ் ஆகியோரை குளத்தில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளார்.

ஆனால் சிறுமி விஸ்வஜோதியை காப்பாற்றுவதற்குள் விஸ்வஜோதி தண்ணீரில், மூழ்கினார். இதனை அடுத்து அக்கம் பக்கத்திரின் உதவியுடன் குளத்தில் மூழ்கிய விஸ்வஜோதியை சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்த்தில் குளிக்கச் சென்ற சிறுமி உயரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி உயரிழந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்று பேரை உயிருடன் மீட்ட 8ம் வகுப்பு மாணவன் சபரீஸ்வரனை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டினர். இந்த மாணவன் இல்லாவிட்டால் மற்ற சிறுவர்களில் நிலை மோசமாகி இருந்திருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Spread the love
Exit mobile version