தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா (shivdas meena) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் புதிய தலைமை செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதை அடுத்து, தற்போது தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக்கொண்டார்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் பதவி பொறுப்பேற்றுக்கொண்ட அன்றே மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில், இன்றுடன் அவர் ஒய்வு பெறுகிறார். இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, தற்போது தமிழ்நாட்டின் 49வது தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக்கொண்டார்.