சிவகங்கை மாவட்டம் சிராவயல் (Siravayal) மஞ்சுவிரட்டுப் போட்டியில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும் நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
அதே புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர், ராஜாபட்டி, குறுக்களையாபட்டி ஆகிய மூன்று கிராம பொதுமக்கள் சார்பில், தைப்பொங்கலை முன்னிட்டு வடமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை போலவே சிவகங்கை மாவட்டம் சிராவயலிலும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் மாடுகளை அவிழ்த்துவிட்ட போது எதிர்பாராத விதமாக மாடுமுட்டியதில் 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட போதும் 2 உயிர்கள் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா ரூ.3 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
”சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்ற இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் (Siravayal) ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு.முத்துமணி (வயது 32) த/பெ.முத்துராமன் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் (வயது 12)
த/பெ.லட்சுமணன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/jallikattu-competition-in-pudukottai-district-vadamalapur-minister-meiyanathan-inaugurated/
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.