ITamilTv

வெயில் காலத்தில் ஆண்களுக்கும் ஸ்கின் கேர் முக்கியம்.. இத பண்ண மறந்துராதீங்க!

Spread the love

Skin care for men : வெயில் காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஸ்கின் கேர் ரொம்பவே முக்கியம்.. பொதுவா ஸ்கின் கேர்ல ஆண்கள் பண்ற சில தவறுகள் என்ன அப்டீன்றதையும்.. அதுக்கான சொலியூசன் என்ன அப்டீன்றதையும் பாக்கலாம்..

பொதுவா வெயில் காலத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வியர்வையும் எண்ணெய் உற்பத்தியும் உண்டாகும். இதுனால உங்க முகம் பாக்குறதுக்கு எண்ணெய் வழிஞ்ச மாரி இருக்கும்.

இதையும் படிங்க : பாதாம் பிசின் : உடம்பு சூடு முதல்.. ஆண்மைக் கோளாறு வரை குணமாகும்!

இத தவிர்க்கிறதுக்கு உங்க ஸ்கின்க்கு ஏற்றவாறு மென்மையான ஃபேஸ்வாஷை பயன்படுத்தி முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும். அதைத்தவிர வெறும் நீரில் அவ்வப்போது முகத்தைக் கழுவுவது நல்லது.

இது உங்க பேஸ்ல இருக்க அழுக்குகளையும் எண்ணெய் சுரப்பையும் சுத்தம் செய்து சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

குறிப்பாக வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்க சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ள வேண்டும். திக்காக இல்லாமல் லைட் க்ரீமாக, வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைஸரை பயன்படுத்துவது நல்லது.

சன் ஸ்க்ரீன் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கும் அளவுக்கு ஆண்களிடம் இல்லை. ஆண்களின் சருமத்துக்கு கட்டாயம் சன் ஸ்க்ரீன் தேவை.

அதிலும் வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே சன் ஸ்க்ரீன் இல்லாமல் வரக்கூடாது. வறண்ட சருமம் உடையவர்களாக இருந்தால் க்ரீம் பேஸ்டு சன் ஸ்க்ரீனும் ஆயில் ஸ்கின் உள்ளவர்களாக இருந்தால் ஜெல் பேஸ்டு சன் ஸ்கிரீனும் பயன்படுத்துங்கள்.

இது உங்களுடைய சருமத்தை சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். சன் டேன் வராமல் தடுக்கும்.

ஆண்களுடைய சருமத்துக்கு Exfoliation கட்டாயம் தேவை. வருடக்கணக்கில் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்காமலே இருப்பார்கள். இது மிக தவறு.

இப்படி இறந்த செல்கள் நீக்கப்படாமல் இருக்கும்போது சருமத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கபபடும். வாரத்திற்கு ஒருமுறை சருமத்தை ஸ்கிரப் செய்து எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்லது. இதுக்கு நீங்க வீட்ல இருக்குற அரிசி மாவு அல்லது காபி பவுடர் ஸ்கிரப் யூஸ் பண்ணலாம்.

வெயில் காலத்தில் இரண்டு முறையாவது குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உடல் சூட்டைத் தணிக்கும்.

வெயிலால் ஏற்படுகிற வறட்சியால் உங்களுடைய உதட்டை ஹைட்ரேட்டிங்காக வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்துங்கள்.

ட்ரிம்மர் மற்றும் ஹாட்டான க்ரீம்கள் பயன்படுத்தி ஷேவ் செய்தால் அது சருமத்திற்கு எரிச்சலைத் தரும். அதனால் வெயில் காலத்தில் இந்த வகையான ஷேவிங் முறையைத் தவிர்த்து, அதற்கு பதிலா கூலிங் ஷேவ் ஜெல் பயன்படுத்தி ஷேவ் செய்யலாம். ஷேவ் செய்தபிறகு, குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது. முகத் தசைகளை கடினமாகாமல் மென்மையாக வைத்திருக்க உதவும்.

இந்த ஸ்கின் பராமரிப்புகளையும் செய்வதோடு ஆரோக்கியமான உணவ முறையும் அவசியம்.

குறிப்பாக தலைமுடிக்கும் சருமத்திற்கும் மிக அவசியமான புரோட்டீன் மற்றும் பி வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிக்க சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறும் Skin care for men.

இதையும் படிங்க : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ம் வகுப்புத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை


Spread the love
Exit mobile version