ITamilTv

மோகன்லால் குறித்து அவதூறு.. கேரள யூ-டியூபர் கைது!!

Mohanlal

Spread the love

மோகன்லால் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள யூ-டியூபர் அஜு அலெக்ஸ் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வயநாடு பேரிடர் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் தங்களால் முடிந்த நிவாரண நிதியை கேரள அரசுக்கு வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூ-டியூபர் அஜு அலெக்ஸ் தனது யூ-டியூப் சேனலில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற மலையாள நடிகர் மோகன்லால் குறித்து அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் “மோகன் லால் அங்கிருப்பவர்களின் நேரத்தை வீணடிப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு தன்மானமே இல்லை.” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக போலீசாரிடம் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான சித்திக் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கவுரவ லெப்டினண்ட் கர்னல் என்ற அடிப்படையில் நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யூ-டியூபர் அஜு அலெக்ஸ் மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான வகையில் கருத்து பதிவிட்டு வருவதாக சித்திக் தெரிவித்துள்ளார்.

எனவே, சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லா போலீசார் யூ-டியூபர் அஜு அலெக்ஸை கைது செய்துள்ளனர்.


Spread the love
Exit mobile version