Site icon ITamilTv

தென்மேற்கு பருவமழை தொடங்கியது – தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

South West Monsoon rain

South West Monsoon rain

Spread the love

தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாக ( South West Monsoon rain ) இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கி வந்த நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.

இந்நிலையில் , கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியாகி அனைவருக்கும் இன்பச்செய்தியை கொடுத்தது . அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

Also Read : புத்தாடை வாங்க சென்றபோது நிகழ்ந்த சோகம் – சாலை விபத்தில் சிக்கி 5 பேர் பலி..!!

இதையடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுநமட்டுமின்றி தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, நாகை, தஞ்சாவூர் , திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ( South West Monsoon rain ) பகுதிகளிலும் இன்று மாலை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Spread the love
Exit mobile version