Site icon ITamilTv

Southern Districts : நாளை முதல் வெளுக்கப்போகும் மழை? – வானிலை அலெர்ட்!

Southern Districts

Southern Districts

Spread the love

தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், நாளை தென்தமிழகத்தில் (Southern Districts),

ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (21.02.2024) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

இதையும் படிங்க : சமவேலைக்கு சமஊதிய போராட்டம் : இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாய கைது – டிடிவி கண்டனம்!

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (22.02.2024) தென்தமிழகத்தில் (Southern Districts) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை (23.02.20240 அன்று தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

24.02.2024 மற்றும் 25.02.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 26.02.2024 மற்றும் 27.02.2024 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதையும் படிங்க : உலக தாய்மொழி தினத்தை கொண்டாடும் வகையில் “அகர முதல எழுத்தெல்லாம்…” திருக்குறளை மழலை மொழியில் க்யூட்டாக கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பேத்தி மிளிர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version