Site icon ITamilTv

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ; No சீருடை – தமிழக அரசு முடிவு

Special class

Special class

Spread the love

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு 2023-24 க்கான இறுதித் தேர்வுகள் முடிந்து மாணவர்கள் ( Special class ) கோடை விடுமுறை தொடங்கியுள்ளன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது.

கோடை விடுமுறை என்பது ஒரே நிலைப்பட்ட சூழலிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெறுவதற்கும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கும் உதவுகிறது.

தற்போதைய நாட்களில் வெப்பநிலை சாதாரணமாக 100 டிகிரிக்கு மேல் தான் பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்ப அலையைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சில தனியார்ப் பள்ளிகள், 10, 12ஆம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

Also Read : தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீஸர் குறித்து இயக்குநர் லோகேஷ் போட்ட டக்கர் ட்வீட்…!!

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் சிலர் இந்த சிறப்பு வகுப்புகளை ஆதரித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிறிதும் ஓய்வு கொடுக்காமல் பாடம் நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அதிக மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார்ப் பள்ளிகளின் இந்த செயல்களைக் கல்வியாளர்கள் எதிர்க்கின்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தால் மாணவர்களுக்கு ஏதாவது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்ற கேள்வியையும் முன் நிறுத்துகின்றனர்.

இவ்வாறு பல்வேறு தரப்பினர் கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடத்துவதை எதிர்க்க, முதல்வர் தனிப்பிரிவில் 14417 என்ற எண்ணிற்குப் புகார் மனுக்கள் வந்துள்ளன. இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சில தனியார்ப் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது உறுதி ஆனது.

மேலும் இதுகுறித்து வரும் குழப்பங்களைத் தவிர்க்கச் சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களைப் பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read : தமிழக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி – சத்யபிரதா சாஹு விளக்கம்..!!!

இதையடுத்து, ’எந்த பள்ளியும் கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது’ என, பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் அவர் கூறிருப்பதாவது : அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும், கட்டாயம் வர வேண்டும் என்று அழுத்தம் தரக் கூடாது.

இந்த உத்தரவை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ( Special class ) உரிய முறையில் பின்பற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version