Site icon ITamilTv

கந்த சஷ்டி திருவிழா : சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்!

Spread the love

ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் கடந்த 13ஆம் தேதி தொடங்கி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நாளை நவம்பர் (18.11.23) மாலை கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் கந்தஷ்டி திருவிழாவிற்க்காக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில்,

“சூரசம்ஹாரம் நடக்கும் நிலையில், இன்று (நவம்பர் 17) இரவு 11.55 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு நாளை (நவம்பர் 18) இரவு 10.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version