ITamilTv

Madurai Special trains | மதுரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

Spread the love

மதுரையில், கோடை கால விடுமுறையையொட்டி பொதுமக்கள் அதிக இடங்களுக்கு செல்லும் காரணத்தால் போக்குவரத்து நெரிசலை ஏற்படாமல் குறைக்க சிறப்பு ரயில்கள் (special train) இயக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி மதுரை தென்னக ரயில்வே சார்பில், மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதினால் பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கக்கூடிய வகையில், தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் (special train) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 5மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும்.

அதேபோல், மறுநாள் அதிகாலை 6.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். பின்பு, காலை 8:45 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும்,

இந்த ரயிலில், 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு பொதுப் பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயிலில் வழக்கமான பயண கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version