அம்பேத்கர், வள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன்(rpvs manian) கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ் மணியன்(rpvs manian) கலந்து கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,அம்பேத்கர், திருவள்ளுர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பலரை இழிவுபடுத்தி பேசியதாகவும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் ஆர்.பி.வி.எஸ் மணியன்(rpvs manian) பேச்சுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ஆர்.பி.வி.எஸ் மணியனை தி நகரில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.